வாக்குவாதத்தில் காதலியை காதலன் தீவைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஜப்பானில் உள்ள கோவா நகரை சேர்ந்தவர் மாகோடோ கட்டுமான தொழில் செய்து வருபவர். இவர் தனது காதலியுடன் வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று இவர்கள் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் கொண்ட மாகோடோ தனது காதலியின் மீது மண்ணெண்ணெயை தெளித்து காதலி மீது தீ வைத்துள்ளார். பின்னர் அவசர சேவை அழைத்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து அவரது வீட்டிற்கு காவல்துறையினர் வந்த போது காதலி சமைத்துக் கொண்டிருந்த சமயம் தீப்பற்றி விட்டதாக தெரிவித்தார். ஆனால் சந்தேகம் கொண்ட காவல் துறையினர் மாகோடோவாவை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளாத அவர் தொடர்ந்து விசாரித்தபோது ஒப்புக்கொண்டார்.