Categories
மாநில செய்திகள்

வாக்கு இயந்திரங்கள் அசைந்தால் நடவடிக்கை… அதிகாரிகள் கடும் எச்சரிக்கை…!!!

தமிழக வாக்கு இயந்திரங்கள் அசைந்திருந்தால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்கு இயந்திர கோளாறுகள் சரி செய்யப்பட்டு, மக்கள் அனைவரும் வாக்களித்தனர். அதிலும் சில கட்சிகள் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி கலவரம் செய்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் 72.78% வாக்குகள் பதிவானதாக தலைமை தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் தமிழக தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குச்சாவடி இயந்திரங்கள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் இருட்டு அறையில் வைக்கப்பட்டு உள்ளன. அந்த வாக்கு இயந்திரங்கள் அசைந்தால் அல்லது இடம் மாறி இருந்தால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |