தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மே இரண்டாம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறி வந்த நிலையில் 8 மணிக்கே தொடங்கிவிடும் என்று முன்னதாக சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால் பிசிஆர் சோதனை தேவையில்லை. தடுப்பூசி போடவில்லை எனில் வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்குள் எடுத்துக் கொண்ட பிசிஆர் சோதனை முடிவுகளைக் கொண்டு வரவேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.