தமிழகம் முழுவதிலும் உள்ள 234 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. அதில் பல வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து வாக்குபெட்டிகள் அனைத்தும் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்கும் திட்டம் எதுவும் இல்லை. திட்டமிட்டபடி மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஐகோர்ட்டில் அறிக்கை தருவோம். வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைப்பது தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்யவில்லை என அவர் விளக்கமளித்துள்ளார்.