Categories
உலக செய்திகள்

வாக்கு எண்ணிக்கை முடியல…! ”ட்ரம்ப் ஜெயிக்கும்” தேர்தல் மையத்தில் நடந்த செயல்… வைரலாகும் வீடியோ…!!

ட்ரம்ப் வெற்றி பெற அவரது ஆதரவாளர்கள் தேர்தல் மையத்திற்கு வெளியில் பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் முடிவில் இழுபறி தொடர்ந்து வரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் அவர் வெற்றி பெற வேண்டும் என்று தேர்தல் மையத்திற்கு வெளியே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ட்ரம்ப் 213 வாக்குகள் பெற்று பின்னடைவிலும், ஜோ பைடன் 253 வாக்குகளும் பெற்று வெற்றி விளிம்பிலும் இருக்கிறார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுவதால் இழுபறி நீடித்துள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் நொவோடா மாநிலத்திலுள்ள கிளார்க் கவுண்டி தேர்தல் மையத்தின் வெளியே ட்ரம்ப் வெற்றி பெற வேண்டி மண்டியிட்டு கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்து வருகின்றனர். நோவோடாவில் 6 பிரதிநிதிகள் வாக்கு உள்ளது. இதில் ட்ரம்ப் 48.5% வாக்குகள் பெற்று பின்னடைவிலும், ஜோ பைடன் 49.4% வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையிலும் இருக்கிறார். இந்நிலையில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் மையத்திற்கு வெளியில் பிரார்த்தனை செய்யும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |