Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்கள்… வாக்கு எந்திரங்கள்… நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..!!

நாகப்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் வாக்கு எண்ணும் மையமான இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியை ஆய்வு செய்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
நாகை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கீழ்வேளூர், மயிலாடுதுறை, நாகை, வேதாரண்யம், பூம்புகார், சீர்காழி என 6 சட்டசபை தொகுதிகள் இருக்கின்றது. நாகையில் உள்ள இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியில் கீழவேளூர், நாகை, வேதாரண்யம், ஆகிய தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இதேபோல் ஏ.வி.சி. கல்லூரியில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

இதனால் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான பிரவீன் நாயர் வாக்கு எண்ணும் மையமான இ.ஜி.எஸ். பிள்ளை கல்லூரியை ஆய்வு செய்துள்ளார். அங்கு எந்த அறையில் வாக்கு எண்ணும் பணியை மேற்கொள்வது என்றும், எந்த அறையில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது என்றும், போக்குவரத்து வசதிகள் எந்தெந்த இடங்களில் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ்மீனா, தேர்தல் தாசில்தார் பிரான்சிஸ் ஆகிய பலரும் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |