சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, வாக்கு எண்ணும் மையத்திற்கு வருவோர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முகவர்கள், வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவரும் சுகாதாரத் துறையினர் மற்றும் குடும்ப நலத்துறையினர் மூலம் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.
மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வருபவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் தூய்மை பணியாளர்கள் மூலம் மையத்தின் வெளியேயும், உள்ளேயும் கிருமிநாசினி வழங்குவதுடன் கை கழுவுவதற்காக தண்ணீர் மற்றும் சோப்பு ஆகியவை தயார் நிலையில் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.