Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்திற்குள் மர்ம நபர்கள்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழக முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக தமிழக தேர்தல் ஆணையம் இன்று (பிப்.21) மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து நாளை (பிப்.22) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. திமுக நிர்வாகிகள் உட்பட 6 பேர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்ததாக கூறி அதிமுக, பாஜக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Categories

Tech |