Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“நீங்க தானா”… வாக்கு எண்ணும் மையத்தில்….. நள்ளிரவில் புகுந்த வேனால் பரபரப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் நள்ளிரவில் வேன் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவ வீரர்கள் சுழற்சி முறையில் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு நள்ளிரவில் காவல் துறையினர் வேன் வந்ததால் அதிர்ச்சியடைந்த  துணை ராணுவ வீர்கள் வேனை மறித்து பார்வையிட்ட போது அதில் ஸ்க்ரூ டிரைவ் மற்றும் கட்டிங் பிளேடு உள்ளிட்ட உபகரணங்கள் இரண்டு பெட்டிகளில் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தேர்தல் அதிகாரி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவின் கீழ் விசாரணை செய்த கலெக்டர் கூறியதாவது அந்த வேன் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் வந்த வேன் என்றும் அந்த வாகனம் ஆய்வு செய்வதற்காக வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |