சேலம் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தை நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி, எடப்பாடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பதிவான ஓட்டுக்களை எண்ண சங்ககிரியிலுள்ள விவேகானந்தா கல்வி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள அறைகளில் இரண்டு தொகுதிகளிலுள்ள மின்னணு வாக்கு எந்திரங்கள் பத்திரமாக பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த அறையை சுற்றிலும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் நேரில் சென்று அதிகாரிகள் பணியில் செயல்படுகிறார்களா என்றும் மேலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்துள்ளனர்.