நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு துணை தாசில்தார் ஜஸ்டின் பெர்னாண்டோ, கருப்பையா மற்றும் அமர்நாத் ஆகியோர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள், தலைமை காவலர்கள் அடங்கிய 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலுக்கு வாக்குகளை சேகரிக்க வேட்பாளர்களுடன் அதிகபட்சமாக மூன்று பேர் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளித்த நிலையில் அதை மீறுபவர்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் போஸ்டர்கள், பேனர்கள், தலைவர்களின் பாதாகைகள் மற்றும் கொடிகளை கையிலேந்தி செல்கிறார்களா, என்பதையும் கண்காணித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.