திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி என்ற பகுதியில் பிரபல ஜவுளி கடைஉள்ளது. இந்த ஜவுளி கடையின் 4ம் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ரூ.4க்கு வேட்டி, சட்டை, சேலை உள்பட பல ஜவுளிகள் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கடை திறந்தவுடன் அங்கு மலை போல் குவிக்கப்பட்ட ஆடைகளை பொதுமக்கள் தேர்வு செய்து 4 ரூபாய்க்கு வாங்கி சென்றனர். இந்த நிலையில் 4 ரூபாய்க்கு ஆடை வாங்க ஆசைப்பட்ட சிலர் தங்களுடைய விலை உயர்ந்த செல்போன், பர்ஸ் உள்ளிட்ட பொருள்களை தொலைத்த சம்பவங்களும் அரங்கேறின.