Categories
தேசிய செய்திகள்

வாங்கிய 10 வினாடிகளில் போலி மருந்துகளை அடையாளம் காணலாம்….. எப்படி தெரியுமா?….. இதோ முழு விபரம்… !!!

மருத்துவத் துறையில் ஏராளமான மோசடிகள் நடைபெறுகின்றன. இதனால் மக்கள் தினமும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மருந்துகளை ஒரு மெடிக்கல் ஸ்டோரில் அல்லது ஆன்லைனில் வாங்கினால் அந்த மருந்து உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தற்போது ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 வினாடிகளில் மருந்து உண்மையானதா என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும். அதாவது மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஆக்டிவ் மருந்து மூலப்பொருள்களில் QR குறியீட்டை வைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் கீழ் மருந்து விலை நிர்ணய ஆணையம் 300 மருந்துகளுக்கு QR குறியீடு இடப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் மருந்துகளின் விற்பனை மற்றும் விலையில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் மருந்துகளை பதுக்கி வைக்கும் கருப்பு சந்தைகளும் தடுக்கப்படும். இந்த பட்டியலில் வலிநிவாரணிகள், வைட்டமின், சப்ளிமெண்ட்ஸ், ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கருத்தடை மருந்துகள் ஆகியவை அடங்கும்.

அதனை தொடர்ந்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தில், டோலோ, சாரிடான், பேபிஃப்ளூ, ஈகோஸ்ப்ரின், லிம்சீ, சுமோ, கால்போல், கோரெக்ஸ் சிரப், அட்வாண்ட் 72 மற்றும் தைரோனார்ம் போன்ற பெரிய பிராண்டுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகள் அனைத்தும் மிகவும் பிரபலமானவை மற்றும் காய்ச்சல், தலைவலி, வைரஸ் வைட்டமின் குறைபாடு, தைராய்டு மற்றும் கருத்தடை ஆகியவற்றிற்கு வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவை ஆண்டு முழுவதும் அதிக அளவில் விற்பனையாகும் மருந்துகளாகும். இந்த மருந்துகளின் பட்டியல் சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே அவற்றை QR குறியீட்டின் கீழ் கொண்டு வர தேவையான மாற்றங்களை செய்யலாம். அதனை தொடர்ந்து QR குறியீட்டை பயன்படுத்துவதன் மூலம் மருந்து தயாரிப்பில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா என்பதையும் கண்டறிய முடியும். அது மட்டுமில்லாமல் மூலப் பொருள் எங்கிருந்து வருகிறது, இந்த பராமரிப்பு எங்கே போகிறது போன்ற அனைத்து தகவல்களும் கிடைக்கும். மேலும் குறைந்த தரம் போலி மருந்துகளை உட்கொள்வதன் மூலம் மருந்தின் பலனே நோயாளி பெறுவதில்லை. அதனால்தான் குறியீடுகளை நிறுவ அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

Categories

Tech |