இங்கிலாந்து நாட்டில் மூன்று குழந்தைகளின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் என்ற பகுதியில் டோலி சூட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் மெண்டல் ஹெல்த் பார்மசிஸ்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் மூன்று( 6)(8) மற்றும்( 5) குழந்தைகள் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வீட்டு வாசலில் இரண்டு சாக்லேட் பாக்கெட் மற்றும் ஒரு கடிதமும் இருந்து. அப்போது அவர் வெளியே வந்தது அதை பார்த்துள்ளார். அது யாருடையது என்பது தெரியாமல் அந்தக் கடிதத்தையும் சாக்லேட்டும் எடுத்து சென்றார். அந்தக் கடிதத்தை எடுத்து படித்துள்ளார்.
அந்தக் கடிதத்தை மூன்று குழந்தைகள் எழுதியுள்ளன. அதில் எங்களுடைய கால்பந்து தொலைந்து விட்டது அதைக் காணாமல் நாங்கள் ரொம்ப நாட்களகவே கவலைபட்டு கொண்டிருந்தோம். இந்த பந்து எங்களுக்கு மிகவும் பிடித்தமான பந்து. இதை நீங்கள் கண்டுபிடித்து கொடுக்காமல் இருந்திருந்தால் எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்திருக்கும் என்று அந்த கடிதத்தில் எழுதி இருந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த பந்தை கண்டுபிடித்து கொடுத்ததற்கு உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி என்று எழுதி அந்த கடிதத்தை எழுதும் எங்களுக்கு வெறும்( 6)(8) மற்றும்( 5 )வயது ஆகிறது என்று எழுதியிருந்தது. இதைப் படித்த பார்த்த அந்தப் பெண்ணுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
மேலும் அந்த பெண் மகிழ்ச்சி என்பது ஆடம்பர வாழ்க்கையிலோ. பணத்திலோ. அல்லது ஆபரணங்களில் இல்லை குழந்தைகள் தரும் அன்பில் உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு உதாரணம் ஆகும் என்று தனது டுட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ உலகமெங்கும் பரவி வைரலாகி வருகிறது. இந்தப் பதிவு சுமார் 72 ஆயிரத்திற்கு மேல் லைக் செய்யப்பட்டும் 50 ஆயிரத்திற்கு மேல் பகிரப்பட்டுள்ளது.
— Dolly (@DrDollySud_PhD) March 28, 2021