Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாசலில் தூங்கிய மூதாட்டி…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

வீட்டு வாசலில் தூங்கி கொண்டிருந்த மூதாட்டியின் 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய மர்ம நபர்கை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடி பகுதியில் முனியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மூதாட்டி அவரது மகன் முருகேஸ்வரியுடன் காற்று வரவில்லை என கதவை திறந்து வைத்து விட்டு வாசல் அருகே துங்கி கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை நைசாக கழட்டியுள்ளார்.

இதனை அறிந்த மூதாட்டி எழுந்து சத்தம் போடுவதற்குள் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து மூதாட்டி ராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |