வாசுதேவ் மேனன் திரைப்படத்தில் இசையமைக்கும் சவாலை எதிர்கொள்ள ஊரடங்கு நல்ல முறையில் பயன்பட்டதாக கார்த்திக் தெரிவித்துள்ளார்.
பின்னணி பாடகரான கார்த்திக் அரவான் உள்ளிட்ட சில படங்களுக்கு இசை அமைத்து இசை அமைப்பாளராக மாறியுள்ளார். தற்போது இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா இமைபோல் காக்க என்ற திரைபடத்திற்கு இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தற்போது பணியை துவங்கியுள்ள கார்த்திக், இந்த கொரோனா ஊரடங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது இதில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன்.
நாம் வாழ்க்கை என்று எதை நினைத்தோமோ அதுவெல்லாம் இல்லை.இன்று இதுதான் வாழ்க்கை என்று உண்மையில் கற்றுக் கொண்டுள்ளோம். கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படத்தில் இசை அமைப்பது பெரிய சவாலான காரியம் இதை எதிர்கொள்வதற்கு இந்த ஊரடங்கு எனக்கு மிகவும் நல்ல முறையில் பயன்பட்டது .தற்போது மீண்டும் பணியை துவக்கியதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என மனம் திறந்துள்ளார் பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான கார்த்திக்.