அதிமுகவை விமர்சித்து பேசிய முன்னாள் நிர்வாகி புகழேந்தி, யார் வேண்டுமானாலும் அரசியலில் இருக்கட்டும். திரு அட்டல் பிகாரி வாஜ்பாய் நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். அவரைப் பற்றி அம்மா உட்கார்ந்து இருக்கிறார்கள் பொதுக்குழுவில்…. பொதுக்குழு நடந்து கொண்டே இருக்கிறது, அப்போ என்னவென்று பார்த்தால் திடீரென ஒருத்தர் வந்து வாஜ்பாய் அவர்கள் நடந்து போவது அதையெல்லாம் கிண்டலாக பேசியிருக்கிறார்.
அப்போது அம்மா மைக்கை வாங்கி அந்த வயதை நாமும் அடைவோம், தவறாக இப்படி பேசக் கூடாது என்பதை தடுத்து நிறுத்தினார்.ஒரு அமைச்சர் செய்த தவறை அம்மாவிற்கு தெரியும் என்று தவறாக சொன்னவர் சிறைக்குப் போன கதையும் உங்களுக்கு தெரியும். ஆகவே இழிவாகவும், தரக்குறைவாகவும் மற்றவர்கள் குடும்பத்தைப் பற்றியோ தவறாக இதுவரை நாங்கள் பார்த்து வணங்குகின்ற தலைவர்களாக விளங்கக்கூடிய தந்தை பெரியார் ஆகட்டும்,
பேரறிஞர் அண்ணா ஆகட்டும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆகட்டும், புரட்சித்தலைவி அம்மா ஆகட்டும் யாரையும் தரக்குறைவாக பேசுவதும் இல்லை, பேசுவதற்கு அனுமதி அளிப்பதும் இல்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் கலைஞர் என்றுதான் கருணாநிதி அவர்களை சொல்லியதை பார்த்தோம். ஆனால் அதிமுகவில் உள்ள அமைச்சர்கள் என்னென்ன பேசினர்கள் என விமர்சித்தார்.