Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வாடகைக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி சாலை மறியல்”….. 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு….!!!!

கும்பகோணம் அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வாடகைக்கு குடியிருப்போர் நல சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தங்களின் ஏழ்மை நிலைக் கருதி அரசு அதிகாரிகள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என சென்ற 2016 ஆம் வருடம் முதல் போராடி வருகின்றார்கள்.

இது பற்றி அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு விட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Categories

Tech |