Categories
சினிமா விமர்சனம்

வாடகைத்தாய் மூலம் குழந்தை…. சிக்கிக்கொள்ளும் நபர்கள்…. யசோதா படத்தின் விமர்சனம்….!!!!

வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக் கொடுக்கும் நபர்கள் மாட்டிக்கொள்ளும் சிக்கல்களை மையக் கருத்தாக வைத்து உருவாகியுள்ள கதைக்களம் தான் யசோதா.

எளிய குடும்பத்தில் பிறந்த சமந்தா தன் தங்கையின் ஆபரேஷன் செலவுக்கு பணம் தேவைப்படுவதால் வாடகைத் தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொடுக்க முடிவு செய்கிறார். இதையடுத்து 3 மாதம் ஆன நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார். அங்கு சமந்தாவை போன்று பல பேர் வாடகைத்தாய் வாயிலாக குழந்தை பெற்றுக்கொள்ள  இருக்கின்றனர். மற்ற பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையில் இறந்து விடுகின்றனர்.

இதனை பார்த்து பயப்படும் சமந்தா, பெண்கள் இறப்பதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முயற்சி செய்கிறார். கடைசியில் அந்த மருத்துவமனையில் உள்ள மர்மம் என்ன..? பெண்கள் இறக்க காரணம் என்ன..? உண்மையை சமந்தா கண்டுபிடித்தாரா..? என்பதே படத்தின் மீதிக் கதை ஆகும். படத்தில் யசோதா கதாபாத்திரத்தில் நடித்து உள்ள சமந்தா, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது பாசம், தங்கை சென்டிமென்ட், ஆக்சன் என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். அதிலும் குறிப்பாக சண்டைக்காட்சிகளில் கைத்தட்டல் வாங்குகிறார்.

இதற்கிடையில் ஸ்டைலிஷ் வில்லியாக வரலட்சுமி சரத்குமார் கலக்கியிருக்கிறார். அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். உன்னிமுகுந்தன், ராவ் ரமேஷ், சம்பத் ராஜ் உட்பட பலர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். வாடகைதாய் கதையை வைத்து கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கியிருக்கிறார்கள். 2 விதமாக திரைக்கதை நகர்த்தி சரியான இடத்தில் ஒன்று சேர்த்து இருக்கின்றனர். VFX -2 யில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மணிஷர்மாவின் பின்னணி இசையானது  படத்துக்குபலம் சேர்த்து இருக்கிறது. அதேபோன்று சுகுமாரின் ஒளிப்பதிவு சிறப்பானது ஆகும்.

Categories

Tech |