வாடகை தாய் விவகாரத்தில் நயன்தாரா விக்கி மருத்துவமனை விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இவர்கள் இருவரும் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார் இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் நயன்- விக்கி குழந்தை விவகாரம் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியபோது, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா – விக்னேஷ் தம்பதியனிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆன பின்னர் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள இயலும் இணை இயக்குனர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த குழுவினர் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் சிகிச்சை பெற்ற மருத்துவமனை பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவின் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். மேலும் இந்த விசாரணை குழுவினர் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.