Categories
சினிமா தமிழ் சினிமா

வாடகைத்தாய் விவகாரம்… விக்கி – நயன் மீது விசாரணை… அடுத்த நடவடிக்கை என்ன…?

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்பாக இருவரும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். இவர்களின் அறிவிப்புக்கு பின் இது பற்றி பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் அதன் மீதான விசாரணையை அரசு அதிகாரிகள் குழு தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் பற்றி பேசும் சட்ட வல்லுனர்கள் வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்டபடி சட்டவிரோதமாகவோ வர்த்தக நோக்கிலோ குழந்தை பெற்றிருந்தால் நயன் விக்கி தம்பதியினர் மீது நடவடிக்கை எடுக்கபடலாம். ஏன் பத்து வருடங்கள் வரை சிறை தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.

Categories

Tech |