வாடகை ஒப்பந்தங்கள் அனைத்தையும் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் சட்டதிருத்தம் உட்பட 6 சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்த மசோதாவில், சொத்துரிமையாளர், வாடகைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகளை சமநிலைப்படுத்துவதை, இந்த மசோதா நோக்கமாக கொண்டு இருக்கிறது. இதனையடுத்து வாடகை ஒப்பந்தங்கள் அனைத்தையும் கட்டாயமாக பதிவு செய்ய 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர், வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம்வகை செய்கிறது.
இவை அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக் கொள்வதற்காக 2021-ஆம் ஆண்டு மாதிரி குத்தகைச் சட்டத்திற்கு 2021 ஜூன் 2-ல் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இச்சட்டத்தில் வழங்கப்பட்ட ஆலோசனைகளை செயல்படுத்த 2017ஆம் ஆண்டு உரிமையாளர், வாடகைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டமசோதா குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.