சென்னையில் ஓலா, ஊபர் நிறுவனங்கள் வாடகை கார் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை அதிகரிக்கலாம் என்றும் சுமார் 10% முதல் 15% வரை விலை ஏற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊபர் நிறுவன அதிகாரி சென்னையில் 10 சதவீதம் வரை வாடகை ஏற்றுவது நடைமுறைக்கு வர உள்ளது என கூறியுள்ளார். மறுபுறம் சென்னையில் ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வாடகை கட்டணம் உயர்வு விரைவில் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Categories