வாடகை வீட்டில் வசித்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்துள்ள வெப்படை பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்கள் பல ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இதனையடுத்து நாங்கள் கூலித்தொழில் செய்து வருவதால் எங்களுக்கு சொந்தமாக எவ்வித சொத்துக்களும் இல்லை.
மேலும் வாடகை கொடுக்கவும் பணம் இல்லாமல் ஏழைகளாகவே அவதிப்படும் எங்களுக்கு அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் எங்களின் சுமை சற்று குறையும் எனவும் வேதனையுடன் தெரிவித்தனர்.