வாடகை செலுத்தாத கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. இந்நிலையில் 9 லட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 2 கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவிப்பு செய்துள்ளனர். ஆனால் கடையின் உரிமையாளர்கள் வாடகை செலுத்தாமல் இருந்துள்ளனர்.
இதனால் மாநகராட்சி ஆணையர் பிரபாகரன் கடைகளை பூட்டி சீல் வைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி நகராட்சி பொறியாளர் திருமலைவாசன், மேலாளர் முத்துக்குமரன், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் வணிக வளாகத்தில் இயங்கி வந்த 2 கடைகளையும் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் வாடகை வரி உள்ளிட்ட நிலுவைத் தொகை செலுத்தாத வணிக வளாகங்கள் மற்றும் நகராட்சிக்கு சொந்தமான கடை உரிமையாளர்கள் வருகிற 30-ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையர் பிரபாகரன் எச்சரித்துள்ளார்.