Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வாடகை செலுத்தாத கடைகள்” சீல் வைத்த அதிகாரிகள்…. வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு….!!!!

வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள போரூரில் ராமநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சிலர் வீடுகளை கட்டி வசித்து வருவதோடு வீடுகளுக்கு முன்புறம் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர்கள் கடந்த சில மாதங்களாக வாடகை பணத்தை சரிவர செலுத்தவில்லை. இதன் காரணமாக எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதன் காரணமாக வியாபாரிகளுக்கும் அதிகாரி களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தங்களுடைய கடமையை செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். இந்த தகவல் தெரிந்த உடனே தமிழ்நாடு வியாபாரிகள் சங்க தலைவர் விக்ரமராஜா உடனடியாக கைது செய்யப்பட்ட வியாபாரிகளை சந்தித்து பேசினார். அதன் பிறகு விக்ரமராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் வியாபாரிகள் மீது எந்த ஒரு வழக்கம் போடாமல் கைது செய்ய நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்றார். அதன் பிறகு வீடுகள் கட்டி குடியிருப்பவர்கள் தான் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அந்த கடைகளுக்கு வியாபாரிகள் வாடகை செலுத்துகின்றனர். இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் கமிஷனரை சந்தித்து முறையிட இருக்கிறோம். இதற்கு அரசு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வணிகர்களை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் மாபெரும் போராட்டம் நடைபெறும் என்றார். மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் குடியிருப்பாகவும், கடை களாகவும் வாடகைக்காக விடப்பட்டுள்ளது. இதில் சிலர் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கின்றனர். அவர்கள் சரிவர வாடகை பணத்தை செலுத்தாததால் நீதிமன்றம் அந்த இடங்களை கோவில் வசம் ஒப்படைத்துள்ளது. இதன் மதிப்பு 13 கோடி ரூபாய் ஆகும் என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |