சென்னை சேர்ந்த அருண் முத்துவேல் என்பவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வாடகை தாய் ஒழுங்குமுறை சட்டம் மற்றும் இனப்பெருக்க தொழில்நுட்ப திருத்த சட்டம் போன்றவைகள் ஒரு தலைப்பட்சமாக இருப்பதுடன், வேறுபாடு களையும் உருவாக்குகிறது. இந்த சட்டங்கள் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்கும், அந்தரங்க உரிமைகளுக்கும் எதிராக இருக்கிறது.
அதோடு சமத்துவ உரிமை மற்றும் தனிமனித உரிமைக்கும் எதிராக இருக்கிறது என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடர்பாக ஐசிஎம்ஆர், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், குடும்ப நல அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம் போன்றவைகள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.