தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் மாதம் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஹனிமூன் சென்ற நிலையில் அவ்வப்போது பல புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தனர். இந்நிலையில் அண்மையில் திடீரென தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டு இருந்தார்.
திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் எப்படி குழந்தை பிறந்திருக்க முடியும் என அனைவரும் குழம்பி இருந்த நிலையில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக கூறப்பட்டது. இதனால் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். இவர்களின் குழந்தைகள்,வாடகை தாய் மற்றும் அரசின் விசாரணை என சூடு பறக்கும் நேரத்தில் நயன்தாரா ராஜஸ்தான் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நயன்தாரா நடித்து வரும் நிலையில் ஷூட்டிங் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டன.நயன்தாரா நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டும் மீதம் இருப்பதால் 20 நாட்கள் படப்பிடிப்புக்காக அவர் ராஜஸ்தான் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.