லாரி நிறுவன உரிமையாளர்கள் வாடகை பணத்தை அதிகரித்து தருமாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டியில் லாரி நிறுவன உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் வாடகை கட்டணத்தை தங்களுக்கு உயர்த்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஆறுமுகம், அக்ரோ சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.