வேலூர் மாவட்ட எல்லையில் சசிகலாவை வரவேற்கும் விதமாக வாடகை ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ அனுமதிக்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இருந்து வரும் 8ஆம் தேதி தமிழகம் திரும்பும் சசிகலா கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை ,காஞ்சிபுரம் வழியாக சென்னை சென்றடைகிறார். இந்த நிலையில் அமமுக கழக அமைப்புச் செயலாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்வுமான ஜெயந்தி பத்மநாதன் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அதில் மனுதாரர் மாதனூர் அருகே வாடகை ஹெலிகாப்டர் மூலம் சசிகலாவை மலர் தூவி வரவேற்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.