Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளரின் பில்லில் சேவைக்கட்டணம்…… உடனடி அமல்படுத்த அதிரடி உத்தரவு…..!!!!

உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் வாடிக்கையாளர்கள் முறையிடலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் உணவகங்கள் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் பெறக்கூடாது என்ற உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசின் வழிகாட்டுதல் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |