மும்பை, டெல்லி, வாரணாசி மற்றும் கொல்கத்தா போன்ற நான்கு நகரங்களில் ஜியோ நிறுவனம் தனது 5ஜி சேவை சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. விரைவில் அடுத்த வருடத்திற்குள் ஜியோ வின் 5ஜி சேவை அனைத்து நகரங்களிலும் வசித்து வரும் மக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் 5 ஜி நெட்வொர்க்கை பெற வாடிக்கையாளர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்ற சூழலில் ஜியோ நிறுவனம் தற்போது அதிரடியாக 4 ஜி பயனர்களுக்கு அசத்தலான திட்டங்களை வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது கவர்ச்சிகரமான பல திட்டங்களை அறிவித்திருக்கிறது.
ஜியோ வழங்கும் இந்த 4g திட்டங்களை பார்க்கும்போது 5g வேண்டும் என்ற எண்ணம் வாடிக்கையாளர்களிடம் எழுவதற்கான வாய்ப்பு இல்லை. தற்போது ஜியோ அறிவித்திருக்கின்ற திட்டங்களின் படி 4ஜி பயனர்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகள் இலவச நெட்லிக்ஸ் உடன் கூடிய டேட்டாவை வழங்குகிறது மற்றும் அமேசான் பிரைம் வீடியோ சந்தாக்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாக்கள் என பல ஓடிடி நன்மைகளையும் வழங்குகிறது. சமீபத்தில் ஜியோ அதன் 12 பிரீபெய்டு திட்டங்களில் இருந்து ஹாட்ஸ்டார் சந்தாக்களை நீக்கிது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜியோவின் ரூ.399 திட்டம்.
இந்த 4g போஸ்ட்பெய்டு திட்டம் மொத்தம் 75 gb டேட்டாவை வழங்குகின்றது. அதாவது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் களுடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது மேலும் netflix, amazon, prime, disney+ hotstar in சந்தாக்களை வழங்குகிறது.
ஜியோவின் ரூ.599 திட்டம்
இந்த திட்டத்தில் 200 g டேட்டா ரோல் ஓவர் மற்றும் 100 gb டேட்டா வழங்குகிறது. கூடுதல் ஜியோ சிம் உடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் களுடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கி வருகிறது. மேலும் netflix, amazon prime மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாக்களை வழங்குகிறது.
ஜியோவின் ரூ.799 திட்டம்.
இந்த திட்டமானது 150 gb டேட்டா பெனிபிட் கேப் உடன் இந்த திட்டம் 200 ஜிபி டேட்டா ரோல் ஓவர் வழங்குகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் குழு உடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் நெட்லிக்ஸ் அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் காண இலவச சந்தாக்களை வழங்குகிறது.
ஜியோவின் ரூ.999 திட்டம்.
இந்த திட்டமானது 200 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது அதன் பின் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் களுடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் netflix amazon prime மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் காண இலவச சந்தாக்களை வழங்குகிறது.
ஜியோ ரூ.1499 திட்டம்.
ஜியோ வழங்கும் மிகவும் விலை உயர்ந்த போஸ்ட் பெய்டு திட்டம் இதுவாகும். இதில் 300 ஜிபி டேட்டா மற்றும் 500 ஜிபி டேட்டா ரோல் ஓவர் வழங்கப்படுகின்றது. இது சில நகரங்களில் சர்வதேச அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் குழு உடன் கூடிய அன்லிமிடெட் அழைப்புகளை வழங்கி வருகிறது. மேலும் netflix amazon prime மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.