ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் புதிய திட்டத்தை தொடங்குவது அறிவித்துள்ளது.
ஒரு மருத்துவ காப்பீடு என்பது ஒரு பாலிசிதாரர் மற்றும் ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள சட்டப்பூர்வ ஒப்பந்தம். இந்த காப்பீடு மூலமாக நாம் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். நம் மருத்துவ செலவுக்கான காப்பீடு அதன் மூலமாக நமக்கு கிடைக்கும். அதன்படி ப்ளிப்கார்ட் நிறுவனம் ஐசிஐசிஐ லோம்பார்ட் நிறுவனத்துடன் இணைந்து, வாடிக்கையாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அளிக்கும் புதிய திட்டத்தை தொடங்க உள்ளது.
இந்தத் திட்டத்திற்கு ‘ ஹாஸ் பிகாஷ் ‘ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவமனையில் சேர்ந்து பெரும் சிகிச்சைகளுக்கு ஒவ்வொரு நாளும் காப்பீடு பணத்தைப் பெறலாம். விபத்து அல்லது திட்டமிட்ட சிகிச்சைகளுக்கு இதை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பு வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.