தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவில் RTGS-இல் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள் நிரந்தர தீர்வுக்கான தொழில்நுட்ப மேம்பாடு குறித்த பணிகள் சனி மற்றும் ஞாயிறு பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது. அதனால் RTGS கட்டண பரிமாற்ற முறையை பயன்படுத்த முடியாது என்று ஆர்பிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் நிதி பரிமாற்றத்திற்கு தேசிய மின்னணு நிதி பரிமாற்ற சேவை நெப்ட்டை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.