Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே!…. “இதை செய்யலன்னா முதலீடுக்கு வட்டி வராது”…. தபால் துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தபால் அலுவலக டெபாசிட், மாத வருமான திட்டம், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட தபால் அலுவலக திட்டங்களுக்கு வட்டி தொகை ரொக்கமாக செலுத்தப்படாது. ஏற்கனவே தபால் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, “தபால் அலுவலக டெபாசிட், மாத வருமான திட்டம், சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட தபால் அலுவலக திட்டங்களுக்கு வட்டி தொகை ரொக்கமாக செலுத்தப்படாது. அதற்கு பதிலாக தபால் அலுவலக கணக்கு அல்லது உங்களுடைய வங்கி கணக்குடன் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கை இணைக்க வேண்டும்.

இதன் மூலம் உங்களுடைய வங்கி கணக்கிற்கு வட்டி தொகை நேரடியாக செலுத்தப்படும். ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. மேற்கூறிய திட்டங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் தங்களுடைய வங்கி கணக்கை இணைக்கவில்லை என்றால் காசோலை மூலம் வட்டி தொகை செலுத்தப்படும். எனவே எளிதான முறையில் வட்டித்தொகையை பெற தபால் அலுவலக சேமிப்பு கணக்கு அல்லது வங்கிக் கணக்குடன் மாத வருமான திட்டம், தபால் அலுவலக டெபாசிட், சீனியர் சிட்டிசன் சேமிப்பு ஆகிய கணக்குகளை இணைக்க வேண்டும்” என்று தபால் துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |