இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது முக்கிய அறிவிப்புகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறது. அந்தவகையில் எஸ்பிஐ முக்கிய எச்சரிக்கை ஒன்றை வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ளது. அதில், “எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுகிறோம் என்றும், குறிப்பிட்டு நிறுவனத்திலிருந்து பேசுகிறோம் என்றும் கூறி வாடிக்கையாளர்களுக்கு சில மோசடிக் கும்பல்கள் மெசேஜ் அனுப்புகின்றனர்.
அதை நம்பி வாடிக்கையாளர்களின் ஒரு சிலர் ஏமாந்து விடுகிறார்கள். முதலில் வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களைப் பெற்றுக் கொண்டு அதை வைத்து பணத்தை பறித்து விடுகின்றனர். எனவே வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை இழந்து அவதிப்படுகிறார்கள். இதன் காரணமாக மோசடி கும்பலிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படியும், யாரிடமும் தகவல்களையும் விவரங்களை பகிர வேண்டாம்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.