மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் எல்ஐசி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் இணைந்து பயன்அடைந்து வருகின்றனர். மக்களிடையே இது ஒரு நம்பிக்கை பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் எல்ஐசி அதிகாரிகள் அல்லது ஏஜெண்டுகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி மோசடி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த மோசடி கும்பல் குறித்து எல்ஐசி நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் வாடிக்கையாளர்கள் இந்த மோசடிக் கும்பலிடம் இருந்து கவனமாக இருக்க வேண்டும். மக்களை ஏமாற்றுவதற்கு இந்த மோசடி கும்பல் முயற்சிக்கிறது. நிறைய பணம் கிடைக்கும் வருமானம் கிடைக்கும், சலுகைகள் கிடைக்கும் என்று மக்களிடம் பொய்களைக் கூறி பணத்தை திருட முயற்சிப்பதாக எச்சரித்துள்ளது. மேலும் இந்த மோசடி கும்பல் எல்ஐசி நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், ஏஜென்டுகள் என்று மக்களை ஏமாற்றுவதாகவும் கூறப்படுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எல்ஐசி நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.