சிறு நிதி வங்கியானசூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (suryoday small finance bank) தொடர் வைப்பு நிதி (Recurring Deposit) திட்டங்களுக்கு வட்டி விகிதங்களை தற்போது மாற்றி அறிவித்திருக்கிறது. புதிய வட்டி விகிதங்கள் மார்ச் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதன் படி பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் இருப்பவர்கள் அனைவரும் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியில் தொடர் வைப்பு நிதி கணக்கு தொடங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் 6 மாதம் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை கணக்கை தொடங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் 100 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். மேலும் அதிக பட்சமாக14,99,990 ரூபாய் வரை டெபாசிட் செய்து கொள்ளலாம்.
12 மாதம் – 6.50%
15 மாதம் – 6.50%
18 மாதம் – 6.50%
21 மாதம் – 6.50%
24 மாதம் – 6.50%
27 மாதம் – 6.25%
30 மாதம் – 6.25%
33 மாதம் – 6.25%
36 மாதம் – 7%
3 ஆண்டுகளுக்கு மேல், 5 ஆண்டுகளுக்குள் – 6.75%
5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை;6%