Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களே..! மார்ச் முதல் இதெல்லாம் மாறுது…. உடனே இதை பண்ணுங்க…. முக்கிய அறிவிப்பு…!!!!

டி.பி.எஸ் வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வங்கிகள் இணைப்பு காரணமாக கடந்த சில மாதங்களில் பல்வேறு வங்கிகளில் பணம், காசோலை புத்தகங்களை வாடிக்கையாளர்கள் புதுப்பிக்க  வேண்டி உள்ளது. தற்போது மீண்டும் டி.பி.எஸ். லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பால் அதன் காசோலை புத்தகம் பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் உடனடியாக தங்கள் காசோலை புத்தகத்திற்கு பதிலாக புதியதே மாற்ற வேண்டும். டி.பி.எஸ் வங்கியும் லட்சுமி விலாஸ் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அனைத்து கிளைகளின் ஐ.எஃப்.எஸ்.சி மற்றும் எம்.ஐ.சி.ஆர் குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த புதிய குறியீடுகள் 2021 அக்டோபர் 25-ஆம் தேதி முதல் செயல்படுகின்றது. அதுபோல பழைய ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு 2022 பிப்ரவரி 20ஆம் தேதிக்கு பிறகு செல்லாது அதனால் புதிய குறியீட்டை மாற்ற வேண்டும். வங்கி தெரிவித்துள்ள தகவலின்படி வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 1ஆம் தேதி முதல் NEFT/RTGS/IMPS மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய புதிய குறியீடு தேவைப்படும். இதற்காக டி.பி.எஸ் வங்கிக் கிளைகளில் மாற்றம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதில் பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு முன் அனைத்து காசோலைகளும் புதிய காசோலையாக மாற்றப்பட வேண்டும். இந்த தேதிக்கு பிறகு பழைய எம். ஐ.சி.ஆர் குறியீட்டை கொண்ட காசோலைகள் ஏற்றுக் கொள்ளப்படாது. புதிய ஐ.எஃப்.எஸ்.சி மற்றும் MICR குறியீடுகள் பட்டியலை முழுமையாக தெரிந்துகொள்ள வாடிக்கையாளர்கள்  WWW.ivbank.com/view-new-ifsc-details.aspx என்ற வெப்சைட்டில்  சென்று பார்க்கலாம்.

Categories

Tech |