இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் அமலுக்கு வந்துள்ளதாகவும் வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என்றும் எஸ்பிஐ அறிவித்துள்ளது.
அதன்படி பழைய ஒரிஜினல் 6.95% அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 0.05% வட்டிச்சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.