டெபாசிட்க்கான வட்டி விகிதத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு வங்கிகள் தங்களது டெப்பாசிட்களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்து வருகிறது.ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்சிஸ் பேங்க், கனரா பேங்க் போன்ற முன்னணி வங்கிகள் தங்களது வட்டி விகிதத்தை மாற்றி அமைத்திருக்கிறது. அந்த வரிசையில் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இணைந்துள்ளது.
இதுபற்றி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீண்டகால ராம் டெபாசிட்டுக்கு வட்டி விகிதம் 25 அடைப்படைப் புள்ளிகள் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டி மாற்றத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட டேர்ம் டெபாசிட்களுக்கான வட்டி விகிதம் 5.45 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கு முன் 5.20 சதவிகித வட்டி நடைமுறையில் இருந்துள்ளது.
டெபாசிட்களுக்கான வட்டி உயர்வு மட்டுமல்லாமல், அடிப்படை வட்டி விகிதம் 9.10 பதவியிலிருந்து 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அடிப்படை விகிதத்தில் கடன் வாங்க வாடிக்கையாளர்கள் இனி குறைந்த வட்டியில் செலுத்தலாம். சென்னையை மையமாகக் கொண்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள மாற்றம் தொடர்பான அறிவிப்பு வாடிக்கையாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய வட்டி மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
fixed டெபாசிட் வட்டி விகிதம் :
7 நாள் முதல் 45 நாட்கள் – 3.40%
46 நாட்கள் முதல் 90 நாட்கள் – 3.90%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் – 4.40%
180 நாட்கள் முதல் 1 வருடம் – 4.90%
1 முதல் 2 ஆண்டுகள் – 5.15%
444 நாட்கள் – 5.25%
2 முதல் 3 ஆண்டுகள் – 5.25%
3 ஆண்டுகளுக்கு மேல் – 5.25%
ரூ.2 கோடிக்கு குறைவான டெபாசிட்களுக்கு மேற்கூறிய வட்டி விகிதம் பொருந்தும்.