Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…. இந்த வங்கி இயங்குவதற்கு தடை…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…!!!!!

டாக்டர் விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கியின் தொழில் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

நிதிநிலை மோசமான வங்கிகள் வருவாய் ஈட்டுவதற்கு  வழியில்லாத வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது ரிசர்வ் வங்கி தடை மற்றும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வரிசையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர்விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கி மீது கடந்த 2018ஆம் ஆண்டு 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி தடையை அமல்படுத்தியுள்ளது. இதன்படி டாக்டர் விதல்ராவ் விகே பாட்டில் கூட்டுறவு வங்கியின் தொழில் செயல்பாடுகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உத்தரவு அவ்வபோது நீட்டிக்கப்பட்டும் வருகிறது. இதற்கு முன் 2022 மார்ச் 17ஆம் தேதி வரை இந்த தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த தடை மேலும் 2022 ஜூன் 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என  ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கி நிலை மேம்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

Categories

Tech |