இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது. ஏற்கனவே எஸ்பிஐ வங்கி இந்த மாதம் முதல் வட்டி வீதத்தை 40 புள்ளிகள் உயர்த்தியது. அதன்படி தற்போதைய கடன் வட்டி விகிதம் 6.65 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் சிஆர்பி கட்டணம் சேர்க்கப்படுவதால் வீட்டுக்கடன் வட்டி வீதமும் உயர்ந்துள்ளது.
தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டுக் கடன் பெற வேண்டும் என்றால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் 800 அல்லது அதற்கு மேல் இருந்தால் 7.05% முதல் 7.45% வரை வட்டி விதிக்கப்படும். மேலும் சிபில் ஸ்கோர் 750 முதல் 799 வரை இருந்தால் 7.15% வட்டி விதிக்கப்படும். 00 – 749 வரை சிபில் ஸ்கோர் இருந்தால் 7.25% வட்டி விதிக்கப்படும். அதே 600 – 699 வரை சிபில் ஸ்கோர் இருந்தால் 7.35% வட்டி விதிக்கப்படும். 550 – 649 வரை சிபில் ஸ்கோர் இருந்தால் 7.55% வட்டி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.