Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாடிக்கையாளர் விட்டு சென்ற பணம்…. வங்கியில் ஒப்படைத்த போலீஸ் ஏட்டு…. பாராட்டும் பொதுமக்கள்…!!!

போலீஸ் ஏட்டு ஏ.டி.எம் மையத்தில் வாடிக்கையாளர் விட்டு சென்ற பணத்தை வங்கி மேலாளரிடம் கொடுத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரபு என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஏ.நத்தம் பண்ணை பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் கிளையில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரக்கூடிய பகுதியில் ஐந்தாயிரம் ரூபாய் வெளியே எடுக்கும் நிலையில் இருந்ததை பார்த்து பிரபு அதிர்ச்சியடைந்தார். அங்கு வேறு யாரும் இல்லை.

இதனால் பிரபு அந்த பணத்தை வங்கி கிளை மேலாளரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் பணத்தை எடுக்காமல் சென்ற வாடிக்கையாளர் யார் என்பது குறித்து ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். போலீஸ் ஏட்டுவின் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |