Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாடிவாசல்’ தாமதமாவதற்கு இவர்தான் காரணம்… வெளிப்படையாக சொன்ன வெற்றிமாறன்…!!!

‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு கால தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி பல திரைப்படங்களில் நடித்து வருவதால் வாடிவாசல் படப்பிடிப்பில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விடுதலை படத்தை முடித்த பிறகுதான் வாடிவாசல் படத்தை இயக்குவேன் என வெற்றிமாறன் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளாராம்.

Vijay Sethupati and Asuran director Vetrimaaran together in 'Viduthalai' -  thoughts? | PINKVILLA

இதனால் விஜய் சேதுபதியிடம் சீக்கிரமாக படத்தை நடித்து கொடுக்கும்படி கேட்டுள்ளார். இருப்பினும் விஜய் சேதுபதியால் விடுதலை படத்தில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை. இதனால் தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தையும் முடிக்க முடியாமல், வாடிவாசல் படத்தையும் தொடங்க முடியாமல் தவித்து வருகிறார்.  இதனிடையே வாடிவாசல் படத்தில் நடித்த பிறகு பாலா இயக்கும் படத்தில் நடிக்க சூர்யா திட்டமிட்டிருந்தார். தற்போது வெற்றிமாறன் வருவதற்கு முன் பாலா படத்தில் நடிக்கலாமா? அல்லது பொறுத்திருந்து வாடிவாசல் படத்தை முடித்துக் கொடுக்கலாமா? என சூர்யா யோசித்து வருவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |