‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட் கேட்ட ரசிகருக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் பாண்டியராஜ் இயக்கும் படத்திலும் ஞானவேல் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Soon . Too early now . And superb unexpected announcements onway too …
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2021
சமீபத்தில் வாடிவாசல் படத்தின் இசை பணிகள் தொடங்கி விட்டதாக இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூர்யா ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வாடிவாசல் படத்தின் அப்டேட் கேட்டுள்ளார். இதற்கு ஜி.வி பிரகாஷ் ‘விரைவில். மிக சீக்கிரமாகவே வரும். மற்றும் அற்புதமான எதிர்பார்க்காத அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.