பிக் பாஸ் சீசன் 6-ல் தற்போது நாளுக்கு நாள் போட்டியாளர்களுக்குள் சண்டை உருவாகி வருகிறது. நேற்றைய தினம் தனலட்சுமி, அசல் கோளார் இடையே சண்டை நடந்த நிலையில், தற்போது அசீம், ஆயிஷா இடையே பெரிய சண்டை வெடித்துள்ளது. முன்பு நடந்த சீசனில் நாட்கள் செல்ல செல்ல தான் போட்டியாளர்களுடைய சுயரூபம் அம்பலம் ஆகியது.
ஆனால் தற்போது இந்த ஆறாவது சீசனில் ஆரம்பித்த பத்து நாட்களிலேயே அனைவருடைய சுயரூபமும் அம்பலமாகி வருகிறது. குறிப்பாக சீரியலில் பெண் ரசிகர்களை மனம் கவர்ந்த ஆசீம் தன்னுடைய சுய ரூபத்தை காட்டியுள்ளார். தகுதிக்கேற்ப போட்டியாளர்களை வரிசைப்படுத்தும் நிலையில் ஆயிஷாவை அசீம் வாடி போடி என்று கத்துகிறார். இடையில் விக்ரமனையும் வாடா போடா என்று ஒருமையில் திட்டுகிறார். இது தொடர்பான வீடியோ ப்ரோமோவாக வெளியாகியுள்ளது.