உடையார்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்த வெப்பம் அக்னி நட்சத்திரம் முடிந்தும் குறையாமல் இருந்ததால் மக்கள் மிகுந்த அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று தா.பழூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு வரை விட்டு விட்டு லேசாக மழை பெய்துள்ளது.
இதனால் பூமி குளிர்ந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் உடையார்பாளையம் பகுதியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான விளாங்குடி, ஆதிச்சனூர், சுத்தமல்லி, மணபதி, தத்தனூர் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.