Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாட்டி வதைத்த வெயில்…. திடீர் மழையால் தணிந்த வெப்பம்….. மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று இரவு திருவட்டார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் திடீரென மழை பெய்தது. இந்நிலையில் ஆற்றூர், மாத்தார், மாத்தூர், சித்திரன்கோடு, இட்டகவேலி, புலியிறங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. நீண்ட நாட்கள் கழித்து வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |