Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வாட்ஸப்பில் பேசி….. “17வயது சிறுமியிடம் எல்லை மீறிய கிரிக்கெட் கேப்டன்”…. கைது வாரண்ட் பிறப்பித்த கோர்ட்..!!

நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சானேவுக்கு நேபாள நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது.

கடந்த ஆண்டு நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் லெக் ஸ்பின்னர் சந்தீப் லமிச்சானே.. லமிச்சானே முன்பு நேபாள 19 வயதுக்குட்பட்ட அணிக்கு கேப்டனாக இருந்தார், முதலில் 2016 இல் ஆசியக் கோப்பையின் போது மற்றும் 2017 இல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கும் கேப்டனாக இருந்தவர் லமிச்சானே. மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் (ஐபிஎல்) விளையாடியுள்ளார்.

இந்நிலையில் 17 வயது சிறுமி ஒருவர் கௌஷாலா பெருநகர காவல் நிலையத்தில் லாமிச்சானே இரண்டு முறை தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில் நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லாமிச்சானேவிடம் நேபாள போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அந்த புகாரில், இளம்பெண் தான் அந்த கிரிக்கெட் வீரரின் ரசிகை, வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் மூலம் அவருடன் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தேன். முதலில் லாமிச்சானே தான் என்னை சந்திக்கவேண்டும் என்று ஆவலுடன் சொன்னார். தன்னை இரண்டு முறை பலாத்காரம் செய்துள்ளார் என்று புகாரில் கூறியுள்ளார்.

இதுகுறித்து காத்மாண்டு பள்ளத்தாக்கு காவல்துறை அலுவலகத் தலைவர் ரவீந்திர பிரசாத் தனுக் கூறுகையில், “இதுபோன்ற தீவிரமான சம்பவங்களுக்கு போலீசார் அதிக கவனம் செலுத்தி விசாரணை நடத்துவார்கள். அந்த சிறுயை  சுகாதாரப் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம், விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என்றார். புகாரின்பேரில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இந்த பாலியல் குற்றம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் புகார் பதிவானதை தொடர்ந்து 2 நாட்கள் விசாரணை நடைபெற்ற நிலையில், நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் லாமிச்சனேவுக்கு நேபாள நீதிமன்றம் நேற்று கைது வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து நேபாள கிரிக்கெட் சங்கம் (CAN), செப்டம்பர் 8, 2022 அன்று, மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நட்சத்திர கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானேவை இடைநீக்கம் செய்தது.

மைனர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் லாமிச்சனேவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக CAN இன் செயல் செயலாளர் பிரசாந்த் பிக்ரம் மல்லா அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்தார். பலாத்கார குற்றச்சாட்டை விசாரிக்கும் காவல்துறையினரின் கோரிக்கையின்படி, காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் லாமிச்சானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த முடிவு வந்தது.

Categories

Tech |